அமோக வரவேற்பளித்து அழைத்து வரப்பட்ட அப்துல்லா மஹரூப்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா மக்கள் வாகன பவனி ஊடாக, பெரும் உற்சாகத்தோடு துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்பை வரவேற்றுள்ளனர்.

கிண்ணியா சூரங்கல் சந்தியில் இன்று அமைச்சரை அழைத்து வரும் முகமாக வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது உலமா சபையினரும் அமோக வரவேற்பளித்துள்ளனர். அத்துடன், நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் உட்பட பலர் ஊர்வலமாக வலம் வந்துள்ளனர்.