மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தில் இடம்பெற்ற பொங்கல் திருவிழா

Report Print Kumar in சமூகம்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று தைத்திருநாள் நிகழ்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டன.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இனங்களிடையே ஒற்றுமையினையும், பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.டி.திகாவத்துற தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஏ.எஸ்.ஜயசேகர,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் உட்பட வர்த்தக சங்க பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், மூவினங்களையும் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பொங்கல் பொங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன் பொங்கல் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.