நீரில் மூழ்கி மரணமடைந்த மாணவனின் திறமையை வெளிப்படுத்தும் பேட்ட நடனம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

நீரில் மூழ்கி மரணமடைந்த வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் திபிசன் எனும் மாணவனின் திறமையை வெளிப்படுத்தும் பேட்ட நடன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மரணமடைந்த குறித்த மாணவனும் வேறு சில மாணவர்களும் இணைந்து பேட்ட என்கின்ற பெயரில் ஒரு வீடியோ காட்சியை தயாரித்து அதனை கடந்த 4ஆம் திகதி வெளியிட்டிருந்தனர்.

குறித்த நடனக் காட்சியில் பிரதான பாத்திரம் ஏற்று நடிக்கும் திவிசன் வவுனியா - ஈரப்பெரியகுளம் குளத்தில் இன்று மூழ்கி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த மாணவனின் திறமையை வெளிப்படுத்தும் குறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

இதேவேளை, வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த தரம் 11 யைச் சேர்ந்த 6 மாணவர்கள் ஈரப்பெரியகுளத்திற்கு சென்றிருந்த வேளை திவிசன் மற்றும் கரிகரன் என்கின்ற இரு மாணவர்கள் தவறி நீரில் விழுந்தமையால் குறித்த மரணம் நிகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.