தாயகம் திரும்ப முற்பட்டவர்கள் கைது!

Report Print Thirumal Thirumal in சமூகம்

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்பி செல்ல முயற்சித்த இரண்டு பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதன்போது, இராமேஸ்வரம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவற்படை அதிகாரிகள் வழக்கம் போல் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

அந்தநேரத்தில் குந்துகால் பகுதியில் சந்தேகமான முறையில் இலங்கை பைபர் படகில் இரண்டு பேர் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இரண்டு நபர்களையும் கைது செய்த கடற்படையினர் விசாரணைகளை நடத்தினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சிவராஜா மற்றும் அன்பு குமரன் ஆகிய அண்ணன் தம்பியாகியவர்கள்.

இலங்கைக்கு சட்ட விரோதமாக படகில் செல்ல முயன்றதாகவும், இவர்கள் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக 1990ல் அகதிகளாக இந்திய தமிழகத்திற்கு சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த வருடங்களாக இவர்கள் மதுரை ஆனையூர் முகாமில் தங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.