திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சேருநுவர பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை இம்மாதம் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முபாரீஸ் இன்று உத்தரவிட்டார்.

ஈச்சிலம்பற்று,வெருகல் பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் வெருகல் பகுதியில் வீடுகளில் புகுந்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சந்தேக நபர்களுக்கெதிராக கிடைத்த முறைப்பாட்டையடுத்து கைது செய்து மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers