தலைமறைவாகியுள்ள பெண்! விசாரணைகளுக்காக கொழும்பு விரையும் பங்களாதேஷ் பொலிஸ்

Report Print Murali Murali in சமூகம்

இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெஹிவளையில் பாரிய தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான பங்களாதேஷின் சிரேஷ்ட பொலிஸ் குழுவினர் நாளை கொழும்பு வரவுள்ளனர்.

சார்க் நாடுகளில் போதைப்பொருள் குற்றங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் இந்தக் குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடை பிரதான சந்தேகநபரான பெண்ணை கைது செய்யும் நோக்கில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கிலேயே குறித்த பொலிஸ் குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

இதேவேளை, 278 கிலோகிராம் ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

3000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகப் பெறுமதி வாய்ந்த குறித்த ஹெரோயின் தொகையானது கடந்த வருடத்தில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஹெரோயின் தொகையாகும்.

இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்யும் நோக்கில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers