மேல் மாகாணத்தில் நடமாடும் நீதிமன்றங்களை அமைக்க திட்டம்!

Report Print Murali Murali in சமூகம்

மேல் மாகாணத்தில் நடமாடும் நீதிமன்றங்கள் சிலவற்றை அமைக்குமாறு நீதி அமைச்சரிடம் கோர இருப்பதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

வாகனமொன்றில் அமைக்கப்படும் இவ்வாறான நடமாடும் நீதிமன்றத்தினூடாக அதே இடத்தில் அபராதம் விதித்து வீதி ஒழுங்குகளை மீறும் குற்றச் செயல்களை மட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“மனிதர்கள், நினைத்த இடங்களில் எல்லாம் வீதியை கடந்து செல்வதை கண்டுள்ளேன். பாதசாரிகள் செய்யும் அவ்வாறான சட்ட மீறல்களுக்காக நடமாடும் நீதிமன்றங்களினூடாக அபராதம் விதிக்க முடியும்

அவர்களுக்கு அதே இடத்தில் அபராதம் விதித்தாவது திருத்த வேண்டும். இவ்வாறான செயற்பாட்டில் எந்த அரசியலும் பார்க்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.