விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தற்போது யாரிடம்! காரணம் இவர்களே

Report Print Sujitha Sri in சமூகம்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தற்போது பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய மல்வத்து தேரர்களை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேற்று சந்தித்திருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பேதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் இடம்பெற்ற முப்பது வருட யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், பாதாள உலக குழுக்களிடம் காணப்படுகின்றன.

இதேவேளை நாட்டில் மனிதர்கள் கொலை செய்யப்படுவதற்கு குறித்த குழுவே காரணம்.

இதனை தடுக்க பொலிஸார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.