வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி

Report Print Rusath in சமூகம்

பொலன்னறுவை - தலுகான பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார்சைக்கிள் ஒன்றின் மீது ரிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதில் 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்களே இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலும், இந்த விபத்திற்கு காரணமான ரிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த இளைஞர்களையும், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.