மொரவெவ பிரதேச பாடசாலையில் மாணவர்களை சேர்க்க பணம் அறவிடப்படுவதாக பெற்றோர் விசனம்...

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, மொரவெவ பிரதேசத்தில் மிக பிரபல்யமான முஸ்லிம் பாடசாலை ஒன்றில் முதலாம் தர மாணவர்களை சேர்ப்பதற்கு பணம் அறவிடப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலையில் முதலாம் தரத்தில் இணைய உள்ள மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு உரிய ஆசிரியர் இல்லை என பாடசாலை சமூகம் தெரிவித்ததோடு, புதிய ஆசிரியரை நியமிப்பதற்காக 2300 ரூபாய் பணம் அறவிடுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மாணவர் வரவேற்பு நிகழ்வில் உணவு பொருட்கள் வழங்குவதற்காக ஒரு பெற்றோரிடம் 350 ரூபாய் பணம் அறவிடப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்குவதற்காக பல நிகழ்ச்சி நிரல்களை வழங்கி வருகின்றது.

ஆனாலும், திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லையெனவும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மொரவெவ பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாத்திரம் ஏன் இலவசக் கல்வியை வழங்குவதில்லை எனவும் பெற்றோர்கள் வினவுகின்றனர்.

பெற்றோர்களிடம் அறவிடப்படுகின்ற 2,300 ரூபாய் பணத்திற்குரிய பற்றுச் சீட்டுக்கள் பாடசாலையினால் வழங்கப்படவில்லை எனவும், பாடசாலைகளில் அறவிடுகின்ற பணத்திற்குரிய பற்றுச்சீட்டை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Latest Offers