கொழும்பில் உருவாகும் அதிசயம்! ஆழ்கடலிற்குள் இப்படியொரு மாற்றமா?

Report Print Sujitha Sri in சமூகம்

கொழும்பு துறைமுக நகருக்கான நிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் கடலில் நிலம் நிரப்பும் நடவடிக்கை முடிவடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்கள் டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, அங்கு கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பமாகும் எனவும், உருவாக்கப்படும் 269 ஹெக்டெயர் நிலப்பகுதியில், 116 ஹெக்ரெயர் நிலமானது சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரியவருகிறது.

இதேவேளை, துறைமுக நகர் எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டம் தற்போது கொழும்பு நிதி நகரத் திட்டம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆழ்கடலிற்குள் கடற்கரை உருவாகும் அதிசயம் கொழும்பில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers

loading...