யாழ். மாநகர முதல்வரை யாழ். பொலிஸார் இன்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
மாநகர முதல்வரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் நேற்று காலை அழைப்பு விடுத்திருந்தனர்.
எனினும் அவர் விசாரணைக்கு சமூகமளிக்காத நிலையில் இன்று அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண மாநகர முதல்வரினால், சட்டவிரோதமாக நாட்டப்பட்டிருந்த கேபிள் கம்பிங்கள் அகற்றப்பட்டன.
இது தொடர்பில் கேபிள் கம்பங்களை நாட்டிய நிறுவனத்தினரால் யாழ். மாநகர முதல்வருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது யாழ். மாநகர முதல்வரை பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் மாநகர முதல்வர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி பொலிஸாரினால் மாநகர முதல்வர் அலுவலகத்தில் வைத்து அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்ய உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.