வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சைவப்பிரகாச கல்லூரி வீதியிலிருந்து வந்த மோட்டார்சைக்கிள் புகையிர நிலைய வீதிக்கு செல்ல முற்பட்டபோது, புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார்சைக்கிள் மோதியுள்ளது.

விபத்தில் பெண்ணொருவரே படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.