நந்திக்கடல் பகுதியில் சிக்கியுள்ள பெறுமதியான கடல் வாழ் உயிரினங்கள்! மகிழ்ச்சியில் மீனவர்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

ஆழ்கடலில் இருந்து நத்திக்கடல் நோக்கி படையெடுத்த பெரிய சிராய் மீன்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு உயிருடன் ஏற்றுமதி செய்யப்படும் பெறுமதியான நண்டுகள் உள்ளிட்ட கடல் உயிரினங்கள் இன்று அதிகளவு மீனவர்களின் வலைகளில் சிக்கியுள்ளன.

முல்லைத்தீவில் சென்ற ஆண்டு நடுப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக நத்திக்கடல் பகுதியில் நீர்மட்டம் குறைவடைந்து பல ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்து அப்பகுதி மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதிப்படைந்திருந்தது.

இந்த நிலையில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பருவகால மழை காரணமாக நத்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், இயற்கையாகவே நத்திக்கடல் பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.

தற்பொழுது ஆழ்கடலில் இருந்து பெரிய சிராய் மீன்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு உயிருடன் ஏற்றுமதி செய்யப்படும் பெறுமதியான நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் நத்திக்கடல் நோக்கி படையெடுத்துள்ளன.

இதனால் அப்பகுதி மீனவர்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.