லிட்டில் லண்டனில் பிரமிக்க வைக்கும் உலக முடிவு! மர்ம மரணங்களால் ஏற்பட்ட மாற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

லிட்டில் லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் உலக முடிவை காண புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஹோர்டன்பிளேஸில் அமைந்துள்ள உலக முடிவை பார்க்க செல்லும் பல சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் உயிரிழப்புக்களை நிறுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக முடிவின் கீழ் பகுதியை பார்ப்பதற்கு கண்ணாடி ஒன்று பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான ஆய்வு நடவடிக்கைகள் மொரட்டுவை பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட நிபுணர்கள் குழுவினரால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் உலக முடிவை காணச் சென்ற ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவர் உலக முடிவில் இருந்து உயிரிழந்துள்ளார்.

இந்த மரணத்தை அடுத்து இலங்கை அரசாங்கம் உட்பட உரிய பிரிவுகள் அதிக அவதானத்தை செலுத்தியுள்ளது.