திருகோணமலையில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு நிலையம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மொரவெவ பகுதியில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையம் மொரவெவ பிரதேச செயலாளர் டபிள்யூ. எம்.பாத்திய விஜயந்தவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மொரவெவ பிரதேசத்தில் விசேட தேவையுடையவர்களின் நலன் கருதி தங்களுடைய பிரச்சினைகளை தனிமையாக கூறும் விதத்தில் கட்டப்பட்டதாக சமூகசேவை உத்தியோகத்தர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் பிரதேச செயலகத்தில் இயங்கிவந்த இப்பிரிவு விசேட தேவையுடையவர்களின் நலன் கருதியும், அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை தனிமையாக தெரிவிப்பதற்கும், இப்பிரிவின் ஊடாக உடனடித் தீர்வு வழங்கப்பட உள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் தங்களுடைய பிரச்சனைகளை தனிப்பட்ட முறையில் அறிவிக்க முடியும் எனவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.