வன்னி பிராந்திய வேளான் அபிவிருத்தி ஒன்றியம் என்ற அமைப்பு அங்குரார்ப்பணம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஓமந்தை பொது நோக்கு மண்டபத்தில் வன்னி பிராந்திய வேளான் அபிவிருத்தி ஒன்றியம் என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வன்னி மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களின் நலன்பேணும் அமைப்பாகவும் அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பாகவும் இவ் அமைப்பு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இதன்போது நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றுள்ளது.

செயலாளராக கனகசபை அமிர்தலிங்கம், தலைவராக செல்லத்துரை ஸ்ரீதரன், பொருளாளராக நாகமுத்து நாகேந்திரன், உப தலைவராக ச. பூலோகசிங்கம், உப செயலாளராக கு.இராசேந்திரகுமார், போசகர்களாக வேலுப்பிள்ளை கேதீஸ்வரன், தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.