விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற ஜோசப்வாஸ் தினம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் - மடு, விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் மகா வித்தியாலயத்தில் ஜோசப்வாஸ் தினம் மற்றும் கால்கோள் விழா என்பன இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வுகள் இன்று காலை பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளன.

நிகழ்வில் விருந்தினர்களான பங்குத்தந்தை அருட்குமரன் அடிகளார், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மடு வலய கல்வி பணிமனை அதிகாரி ஏ.ஜே.குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தரம் ஒன்றுக்கான மாணவர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து பல நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செல்வம் அடைக்கலநாதன் தனது நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்த ஒரு தொகுதி கணணிகளை பாடசாலை அதிபரிடம் கையளித்துள்ளார்.

இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.