ஜனாதிபதியின் சகோதரரை பதவி விலக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Report Print Ajith Ajith in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் டெலிகொம் நிறுவனத்தின் தவிசாளருமான கமராலகே குமாரசிங்க சிறிசேனவை பதவி விலக்க வேண்டும் என்பது உட்பட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று டெலிகொம் பணியாளர்கள் அடையாளப் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குமாரசிங்க சிறிசேனவின் கீழ் டெலிகொம் நிறுவனத்துக்கு 50 பில்லியன ரூபாய் நட்டமேற்பட்டுள்ளதாக பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் தமது நிறுவனத்துக்கு காரணமில்லாமல், பாரிய வங்கிக்கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பணியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, அவரை உடனடியாக பதவி விலக்க வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.