மாற்று தேவையுடைய குழந்தைகளுடன் பொங்கல் விழா

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் மாற்றுத்தேவைக்குட்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் நிறுவனத்தில் 2019 ஆண்டுக்கான பொங்கல் விழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மன்னார் தமிழமுது நண்பர்வட்டம் அமைப்பினர் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுவலு உடைய 20 க்கு மேற்பட்ட குழந்தைகள், அக்குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தமிழமுது நண்பர் வட்ட அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.