இலங்கை வந்த பிரித்தானிய தம்பதியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

Report Print Vethu Vethu in சமூகம்

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தம்பதியர் தவற விட்ட தமது பணப்பையை மீண்டும் பெற்றுள்ளனர்.

வில்பத்து தேசிய பூங்காவிற்கு அருகில் விழுந்து கிடந்த நிலையில், அனுராதபுரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு பணப்பை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பணப்பையின் உரிமையாளர்களான வெளிநாட்டு தம்பதியை உடனடியாக கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சுற்றி வளைப்பிற்கு சென்று திரும்பி வரும்போது பொலிஸார் இந்த பணப்பையை அவதானித்து வெளிநாட்டவர்களுடையதென உறுதி செய்துள்ளனர்.

அதற்கமைய செயற்பட்ட பொலிஸ் குழுவினர் வில்பத்து தேசிய பூங்கா பொறுப்பாளருடன் இணைந்து இந்த பைக்கு சொந்தக்காரர்களை உறுதி செய்துள்ளனர்.

பணப்பை 34 வயதான ஜோனதன் டேவிட் என்பவருடையதென உறுதி செய்யப்பட்டது. பின்னர் டேவிட் மற்றும் அவரது மனைவிய தேடி பிடித்த பொலிஸார் அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதில் கடவுச்சீட்டு, பெருமளவு பணம், சாரதி அனுமதி பத்திரம் உட்பட பல முக்கியமான ஆவணங்கள் காணப்பட்டுள்ளன.

பணப்பை தொலைந்த நிலையில், தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாகவும் அதனை தேடி தந்த பொலிஸாக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக அவர்கள் தெரிவிவத்துள்ளனர்.