பல லட்சக்கணக்கான மாத்திரைகளுடன் நபரொருவர் கைது

Report Print Manju in சமூகம்

கம்பஹா மாவட்டத்தில் பஸ்யால- வீரசூரியகந்த பிரதேசத்தில் பதிவு செய்யப்படாத போலி மருத்துவ நிலையத்தில் காணப்பட்ட பல வகையான போதை மாத்திரைகள் மற்றும் ஏனைய மாத்திரைகள் லட்சக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீரகுல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த இடத்தினைச் சுற்றிவளைத்த பொலிஸார் குறித்த மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மருத்துவ நிலையத்தில் ஆயுர்வேத மருத்துவர் என குறிப்பிட்ட நபரிடம் மாத்திரைகள் மீட்கப்பட்டுளள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மீரிகம பகலவெல பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் எனவும் சந்தேகநபரை இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.