அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பி விளக்கமறியலில்!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - தோப்பூர் பகுதியில் காணி தகராரில் அண்ணனை துப்பாக்கியால் சுட்ட தம்பியை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தோப்பூர் அல்லைநகர் பபகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்ணணுக்கும் தம்பிக்கும் இடையேயான காணிச்சண்டையின் போதே இவ்வாறு அண்ணனை தம்பி துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

தமது தந்தைக்குச் சொந்தமான காணியில் இரு பிள்ளைகளுடன் தமது அக்கா வாழ்ந்து வருவதாகவும் அவரை வீட்டை விட்டு எழும்புமாறு தம்பியான அச்சு முகம்மது சலீம் கூறியதை அடுத்து அவ்வாறு எழும்ப வேண்டாமெனத் தான் கூறியதாகவும், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தனக்கும் தம்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அடுத்து தம்பி தன்னைக் கட்டுத் துவக்காள் சுட்டதாகவும், வைத்தியசாலைப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காயமடைந்த இந்நபர் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தை நடத்திய சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்து மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.