வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா மாவட்ட செயலகத்தில் மாட்டு பொங்கல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

மாட்டுப் பொங்கல் தினமான இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த பொங்கல் நிகழ்வானது இன்று காலை மாவட்ட செயலக முன்றலில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குட்செட் கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு பிரபாகர குருக்கள் கலந்து கொண்டு விசேட பூஜை வழிபாட்டை மேற்கொண்டிருந்தார்.

குறித்த பொங்கல் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா மற்றும் அரச திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.