சிறீதரனால் முகமாலை கிராமத்தில் வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டல்

Report Print Arivakam in சமூகம்

கிளிநொச்சியில் கடந்த பல வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருந்து மிக அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட முகமாலை பகுதியில் மக்களுக்கான நிரந்தர வீடுகளிற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபை முகாமையாளர் தலைமையில் கடந்த சனிக்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமாகியது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் ரூபாய் எழுநூற்று ஐம்பது ஆயிரம் பெறுமதியான வீடுகளுக்கான அத்திவாரமிடும் நிகழ்வே இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த வீடுகளிற்கான அத்திவாரங்களை இட்டார்.

இங்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பிரதேச செயலர் பரமோதயான் ஜெயராணி மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர், உதவி பிரதேச செயலாளர், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.