பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளையில் ஏற்படவுள்ள மாற்றம்! பெரும் மகிழ்ச்சியில் மக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

கொள்ளுப்பிட்டியில் இருந்து தெஹிவளை வரையில் புதிய கடற்கரை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண சபை அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாநகர சபை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நிதி நகரத்துக்கு மணல் நிரப்பும் பணிகள் நிறைவு செய்யப்பட்டதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

விமான நகரம், தொழில்நுட்ப நகரம் உட்பட பல நகரங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் பெருமளவு மக்கள் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கான பொழுதுபோக்கு தளமாக இந்த கடற்கரை அமையவுள்ளது.

இதன்மூலம் பெருமளவு சுற்றுலா பயணிகளும் இந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


you may like this...