பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கால்கோள் விழா

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் வரவேற்கும் கால்கோள் விழா பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு ஆரம்ப பிரிவு பகுதித்தலைவர் ஏ.சற்குணராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் பட்டிருப்பு வலய உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.பார்தீபன் மற்றும் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா ஆகியோர் பிரதம அதிதியாகவும், பாடசாலை பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன், எம்.சுபேந்திரராஜா, பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் கே.யோகநாதன், பழைய மாணவர் சங்க செயலாளர் ரீ.ஐங்கரன் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது சிரேஷ்ட மாணவர்கள் இவ்வருடம் முதலாம் தரத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்களை மாலையிட்டு வரவேற்று பாடசாலை ஆராதனை மண்டபத்திற்கு அதிதிகள் சகிதம் அழைத்துச் சென்றிருந்தனர்.

குறித்த நிகழ்வினை பாடசாலை ஒழுக்காற்று சபை தலைவர் எஸ்.சுரேந்திரன் நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

களுதாவளை

முதலாம் ஆண்டிற்கு மாணவர்களை வரவேற்கும் கால் கோள் விழா மட்டக்களப்பு களுதாவளை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வித்தியாலயத்தின் பதில் அதிபர் குணலெட்சுமி தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்ட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர். மேலும் இதன் போது மாணவர்களின் கலை,கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் ருசாத்