ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மூதூர், பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறும், மாணவர்களின் இடை விலகலினால் ஏற்படும் இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு கோரியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் கலவன் வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று காலை குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான அமையம் ஏற்பாடு செய்திருந்ததோடு இதில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பாடசாலைக்கு 22 ஆசிரியர்கள் தேவையான நிலையில் தள்போது 15 ஆசிரியர்களே கடமையாற்றுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் நவரட்ணராசா கரிகரகுமாரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Latest Offers