பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாக்குதல் சம்பவம்! காணொளி வெளியானது எப்படி?

Report Print Murali Murali in சமூகம்

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும், சிறைக் கைதிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி வெளியானது எப்படி என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளை பாதுகாக்கும் குழு நேற்று கொழும்பில் இந்த காணொளியை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டது. அதில், வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த காணொளி வெளியாகி கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஆராய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், காணொளி எவ்வாறு வெளியானது என்பது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாக நீதித்துறை அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

Latest Offers