மாணவியை தாக்கிய அதிபர் மீது மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் 9 வயது மாணவியை தாக்கிய அதிபர் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தரம் 4இல் கல்வி கற்கும் குறித்த மாணவி அதிபரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த மாணவியின் பெற்றோர் அதிபரின் மீது ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் இன்று முறைபாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலையில் வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தினை காணவில்லையென தெரிவித்து எனது பிள்ளையினை அதிபர் தனது அறையில் வைத்து தாக்கியுள்ளார்.

அதே பாடசாலையில் கல்வி பயிலும் எனது மகனை அழைத்து அவனிடம் பச்சைமட்டை வெட்டி வருமாறு கூறியதுடன், கொச்சிக்காயும் கொண்டுவருமாறு கூறி அதனைப் பெற்று அதன் மூலம் எனது மகளை தாக்கியுள்ளார்.

எனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் உள்ளது.

இதேவேளை, குறித்த தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட மனிதவுரிமை ஆணைக்குழு இது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers