வவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்தினர் தாக்குதல்: இருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தினை எட்டாம் கட்டை பகுதியில் வவுனியாவிலிருந்து வாரிக்குட்டியூர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தினர் வழிமறித்துள்ளனர்.

எனது நேரத்தில் நீங்கள் செல்வதாக தெரிவித்து ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் போது இ.போ.ச நடத்துனர் மீது இன்று மதியம் தாக்குதல் மேற்கொண்டதில் 31 வயதுடைய தா.விக்கினேஸ் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் குறித்த தனியார் பேருந்தின் நடத்துனர், சாரதியினை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Latest Offers