சிறைச்சாலை கைதி வவுனியா வைத்தியசாலையில் மரணம்!

Report Print Theesan in சமூகம்

சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார்.

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் சிறைவாசம் பெற்று வந்த கொழும்பு மருதானையை சேர்ந்த 41 வயதுடைய கேசவன் சசிகுமார் என்ற நபர் இன்று (18.01) மதியம் 1மணியளவில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை வைத்தியசாலையில் இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.

Latest Offers