சிறையில் கைதிகள் தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

Report Print Kamel Kamel in சமூகம்

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை அறிக்கையும் பரிந்துரைகளும் விரைவில் வெளியிடப்படும் என ஆணைக்குழு ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு, ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் விஜயம் செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காண கைதிகளிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தாக்குதலுக்கு இலக்காண நபர்களை சட்ட வைத்திய அதிகாரியின் எதிரில் முன்னிலைப்படுத்துமாறும், தேவையான சிகிச்சைகளை வழங்குமாறும் மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Offers