கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்! தேடும் நடவடிக்கை தீவிரம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை வீரநகரில் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கரை திரும்பாததையடுத்து அவரைத் தேடும் முயற்சியில் மீனவப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வீரநகர் மீனவச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

நாகேஸ்வரன் டிலக்சன் (31 வயது) எனும் மீனவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மீனவச் சங்கங்களின் 6 படகுகளைப் பயன்படுத்தி வியாழக்கிழமை (17) தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

ஆனாலும், அம்முயற்சி பயனளிக்காமையால் இன்று (18) தேடுதலுக்காக 18 படகுகள் சங்கங்களின் ஏற்பாட்டில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வீரநகர் மீனவச் சங்கம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாகக் கடற்படையினரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

Latest Offers