சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள காணொளி! மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை

Report Print Murali Murali in சமூகம்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் மற்றும் காணொளிகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

அதன்படி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அவ்வறிக்கைகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்ககைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கண்ட கருத்தினை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளை பாதுகாக்கும் குழு நேற்று முன்தினம் கொழும்பில் இந்த காணொளியை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டது. அதில், வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை தாக்கும் காட்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers