பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள மன்னார் மனிதப்புதைகுழி

Report Print Ajith Ajith in சமூகம்

மன்னாரில் தோண்டப்பட்டு வரும் பாரிய மனிதப்புதைகுழி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில் மேலும்,

இந்த புதைகுழி, போரினால் ஏற்பட்ட பழைய காயங்களையெல்லாம் மீண்டும் திறப்பதற்கான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் போரினால் இறந்தவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் மத்தியில் பாரிய மனக்கவலையை இந்த புதைக்குழி தோற்றுவித்துள்ளது.

10 அடி ஆழத்தில் இருந்து நாள்தோறும் மனித எச்சங்கள் வெளியில் எடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்த எச்சங்கள் தற்போது எண்ணிக்கையில் 283ஐ தாண்டியுள்ளன. எனினும் இன்னும் எச்சங்களை கண்டுப்பிடிக்கும் ஏதுக்கள் உள்ளது.

இந்த குழியில் இருந்து 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களினது என்று கருதப்படும் 23 சிறுவர்களின் எச்சங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

125ஆவது நாளாக தோண்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த பாரிய மனிதப்புதை குழியில்இருந்து மேலும் மனித எச்சங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

இந்தநிலையில் இந்த பாரிய மனிதப்புதைக்குழி குற்றங்களுக்கு யார் பொறுப்புஎன்பதை தற்போதைக்கு கூறமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதைக்குழியில் தோண்டல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.