தாயகம் திரும்பவுள்ள இலங்கை தமிழர்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

இந்தியாவில் தங்கியிருக்கும் அனைத்து இலங்கை தமிழ் அகதிகளையும் இலங்கை மீண்டும் தமது நாட்டுக்கு அழைத்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஐயாயிரம் அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள், இலங்கையில் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னர் இலங்கையின் நல்லிணக்க மைல்கல் என்ற தலைப்பின் கீழ் புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள 30 வீதமான இலங்கை தமிழர்கள் இந்தியாவிலேயே தங்கியிருக்க விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

ஏனையோர் இலங்கைக்கு திரும்ப தயாராகவே இருக்கின்றனர். இந்தநிலையில் தமிழகத்துக்கு சென்று விரைவில் அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இவர்கள் நாடு திரும்பியதும் அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று கூறிய ஒஸ்டின் பெர்ணான்டோ, அவர்களை நாட்டுக்கு திருப்பியழைப்பதற்கான கால எல்லையை குறிப்பிடவில்லை.