இரவு நேரத்தில் வானிலிருந்து கொட்டும் மர்ம திரவம்! கொழும்பில் பாதிப்படையும் மக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கறுப்பு மழை பெய்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வத்தளை ஹெதல பிரதேசத்தில் இரவு நேரத்தில் கறுப்பு மழை பெய்வதால் பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

ஒருவகை திரவம் போன்று கறுப்பு மழை காணப்படுவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஒரு மாத காலமாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்யும் இந்த கறுப்பு நிற மழை தொடர்பில் பல அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்த போதிலும் அது குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வத்தளை, ஹெதல காதினல் குரே மாவத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் 1500 குடும்பங்கள் வாழ்கின்றன.

கறுப்பு மழை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

கறுப்பு நிறத்திலான இந்த திரவம் விழுவதனால் பிரதேசத்தின் வீடுகள், மரங்கள், பூக்களில் இந்த திரவம் படிந்து காணப்படுகின்றன.

இதனால் அந்த பகுதி மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வான்வெளி ஊடாக பயணிக்கும் விமானங்களிலிருந்து இவ்வாறான திரவங்கள் கொட்டப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.