கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கேள்வி எழுப்பப்படும்

Report Print Kamel Kamel in சமூகம்

கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கேள்வி எழுப்பப்படும் என சிறைக் கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இந்த குழு, மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் தேசிய அதிகாரசபையிலும், ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இலங்கையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் கேள்வி எழுப்ப உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.