சிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் சிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய சுய தொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் இம்மானுவேல் ரொஷான் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, கூட்டுறவு சங்க கட்டடத்தில் நேற்று மாலை ஐக்கிய சுய தொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தின் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை நகரசபை மற்றும் உப்புவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிகை அலங்கார நிலையங்களில் முதலாம் ஆண்டு தொடக்கம் உயர்தர வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு விடுமுறை தினங்களில் கூட சிகை அலங்காரம் செய்யப்படமாட்டாது.

அவ்வாறு சிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சலூன் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த தீர்மானத்தை மீறி சிகை அலங்காரங்களில் ஈடுபட்டு வந்தால் உரிமத்தை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.