திருகோணமலையில் வெகு சிறப்பாக நடைபெற்ற தேசிய பொங்கல் விழா

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - தம்பலகாம, ஆதிகோனேஸ்வரா கோயிலில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்பின் பங்கேற்றலுடன் தேசிய பொங்கல் விழா நடைபெற்றுள்ளது.

இவ்விழா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினதும் தம்பலகாமம் பிரதேச செயலகத்தினதும் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், 1000க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வுக்கு விருந்தினர்களாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி எரந்த வெலியங்க ,முன்னாள் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தம்பலகாம பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி, தம்பலகாம பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.