அழகிய கிண்ணியா என்ற தொனிப்பொருளின் கீழ் சிரமதான பணி முன்னெடுப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியாவில் பிரதேச செயலாளர் முகம்மது கனியின் வழிகாட்டலில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட 31 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பொது இடங்களில் இன்று அழகிய கிண்ணியா என்ற தொனிப்பொருளின் கீழ் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இச்சிரமதானப் பணி ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் உள்ள சமுர்த்தி பயனாளிகளாலும் சமுர்த்தி பயன்பெறாத குடும்பங்களை சேர்ந்த அங்கத்தவர்களினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களை அழகாக வைத்துக் கொள்வதற்காகவும், சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்து சுகதேகியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் இந்த சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்களிடத்தில் உரையாடும் போது கிண்ணியா பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.