கடலில் காணாமல் போன மீனவர் இரு நாட்களின் பின் மீட்பு

Report Print Mubarak in சமூகம்

கடந்த 16ஆம் திகதி திருகோணமலை - வீரநகரிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.

வீரநகர் மீனவ சங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த இரு நாட்களாக ​மேற்கொண்ட தேடுதலின் பயனாக குறித்த நபர் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளார்.

நாகேஸ்வரன் டிலக்சன் என்ற 31 வயதான இளைஞனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் படகு பழுதடைந்தமையினால் கரைக்கு திரும்ப முடியாத நிலையில் தத்தளித்து கொண்டிருந்தார் என அவரை மீட்டெடுத்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சோர்வுற்றிருந்த நபரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.