போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இடத்தை சுற்றி வளைத்த பொலிஸார்

Report Print Manju in சமூகம்

கொழும்பை அண்மித்த ஜல்தர பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடத்தினை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது போலி நாணயத்தாள்களை அச்சிடுபவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நாணயத்தாளைக் கொடுத்து ஜல்தர- வெலிபில்லாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வியாபார நிலையத்தில் பொருட்கள் வாங்கிய நபர் ஒருவர் நவகமிவ பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்த 1000 ருபாய் நாணயத்தாள்கள் 8 பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

குறித்த சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வீடொன்றினுள் போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இடத்தினை பொலிஸார் முற்றுகையிட்டதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டினுள் இருந்த 1000 ருபாய் போலி நாணயத்தாள்கள் 48 மற்றும் பணம் அச்சிடும் இயந்திரமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.