வெளிநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திருமணமாகாத 24 வயதான தில்ஷான் என்பவரே உயிரிழந்தவர் என தெரியவந்துள்ளது.

2018ஆம் ஆண்டு புகைப்பட கலைஞராகவே அவர் மாலைத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு இலங்கையை சேர்ந்த இரு இளைஞர்களால் தொடர்ந்தும் அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான தில்ஷான், குடும்பத்தாருடன் தொலைபேசியில் உரையாடும் போது குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த 11ஆம் திகதி அங்குள்ள இலங்கையர் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டதாக, மற்றொரு இளைஞன், தில்ஷானின் சகோதரனிடம் குறிப்பிட்டுள்ளார்.

தில்ஷான் மேலும் 5 இளைஞர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக குடும்பத்தினர், பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.