கொலை சம்பவம் தொடர்பில் பௌத்த பிக்கு கைது

Report Print Malar in சமூகம்

பொலன்னறுவை, ஹபரண பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் நபர் ஒருவரை கொலை செய்துள்ளமை தொடர்பிலேயே பௌத்த பிக்கு இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த பிக்குக்கும் நபர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த பொலிஸார் பிக்கு உள்ளிட்ட மூவரை இன்று கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.