அரசியலமைப்புச் சட்டத்தை காணாத எதிர்க்கட்சியினரின் பொய்களை நம்ப வேண்டாம்

Report Print Steephen Steephen in சமூகம்

அரசியலமைப்பு சட்டத்தை காணாத எதிர்க்கட்சியினர், நாங்கள் நாட்டை பிரிக்க போவதாக கோஷமிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி - யக்கலமுல்ல கராகொட பூர்வாராம விகாரையில் இரண்டு மாடி கட்டடத்தை இன்று திறந்து வைத்தார்.

அதன் பின்னர் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாங்கள் நாட்டை பிரிக்க போவதாக எதிர்க்கட்சியினர் கோஷமிடுகின்றனர். எனினும் நாங்கள் அப்படி செய்ய போவதில்லை.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் உட்பட மகா சங்கத்தினரின் ஆசியுடனேயே நாங்கள் நாட்டை ஆட்சி செய்கிறோம்.

பௌத்த பிக்குகளின் ஆலோசனைகளை பெற்றே நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவோம்.

பண்டைய காலத்தில் இருந்தே பௌத்த பிக்குகள் நாட்டை ஆட்சி செய்ய தேவையான ஆலோசனைகளையும் வழிக்காட்டல்களையும் வழங்கினர்.

இதேவேளை, அரசியலமைப்பு சட்டத்தை காணாத எதிர்க்கட்சியினர் நாட்டை நாங்கள் பிரிக்க போவதாக கோஷமிடுகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.