சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெண் திடீர் மரணம்

Report Print Steephen Steephen in சமூகம்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெண்ணொருவர் இன்று முற்பகல் 11 மணியளவில் திடீரென உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியில் மலையில் ஏறும் இடத்திற்கு அருகில் வைத்துக்கு பெண்ணுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதுடன் பெண் உயிரிழந்துள்ளார்.

பொல்கஸ்ஹோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான கே.கே.சந்திரிக்கா என்ற பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.