ரயில் மோதி பரிதாபமாக இருவர் பலி!

Report Print Murali Murali in சமூகம்

ஜா - எல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துடெல்ல ரயில் நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.