மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு

Report Print Ashik in சமூகம்

மன்னார், சதொச வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட மனித உடல் எச்சங்களின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு எதிர்வரும் 24ஆம் திகதி அதிகாலை கொண்டு செல்ல உள்ளதாக அகழ்வு பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த மனித எச்சங்களின் மாதிரிகளுடன் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவும் அமெரிக்கா செல்லவுள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியானது நேற்று 132ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

இதுவரை குறித்த அகழ்வுப் பணிகளின் போது 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 294 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச் செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள மன்னார் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.